தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பிரிவின் முக்கிய தளபதியும்,புலனாய்வுக் கற்கைநெறித் துறைப் பொறுப்பாளரும்,தமிழீழ விடுதலைப் புலிகளின் விசாரணைப் பிரிவுப் பொறுப்பாளருமான கேணல் சங்கீதன் அவர்களின் வீர வரலாற்று நினைவுகள்…!
கேணல் சங்கீதன் அவர்களின் வீர வரலாற்று நினைவுகள்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பிரிவின் முக்கிய தளபதியும்,புலனாய்வுக் கற்கைநெறித் துறைப் பொறுப்பாளரும்,தமிழீழ விடுதலைப் புலிகளின் விசாரணைப் பிரிவுப் பொறுப்பாளருமான கேணல் சங்கீதன் அவர்களின் வீர வரலாற்று நினைவுகள்…!
தமிழீழ மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தேவை உணர்ந்து திருநாவுக்கரசு அன்பழகன் என்னும் இயற்பெயர் கொண்டு 1990 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து “அதிரடி-14 பயிற்சிப் பாசறையில் சிறப்புப் இராணுவப் பயிற்சிகளை திறமையாகச் செய்து முடித்த சங்கீதன் அவர்கள் போராட்டத்தில் மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்பட்டவர்.அமைப்பு இவருக்கு இட்ட பெயர் சங்கீதன்.
இவர் இயல்பாகவே சுறுசுறுப்பும்,குறும்புக் குழப்படிகள் உள்ள ஒரு போராளி.ஆனால் எந்நேரமும் கடமை தவறாத கண்ணியமுள்ள ஒரு போராளி.சக போராளிகளோடு அன்பாகப் பழகக் கூடியவர்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓய்வாக இருக்க மாட்டார்.
சக போராளிகளை அழைத்து ஏதாவது குறும்பு வேலைகளில் ஈடுபடுத்தி தன்னையும்,பிறரையும் ஆளுமையுள்ளவர்களாக வளர்க்க முயற்சி எடுப்பார்.
சாண்டோ சாகச சாதனைகள் செய்து பழகுவார்.கையில் மோட்டார் சைக்கிள் ஏற்றுவார்,கிடங்கில் இருந்து கொண்டு மேலே நெருப்பு எரிப்பார்,நெஞ்சில் பாரம் தூக்கி அடிப்பார் இப்படியான சாதனைகள் செய்து பிறரை வியக்க வைப்பார்.