தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் –2025,

Total Views : 103
Zoom In Zoom Out Read Later Print

பாரததேசத்திடம் 2 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 37வதுஆண்டு நினைவுநாளும்

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் –2025, மெல்பேர்ண் (அறிவித்தல்)

பாரததேசத்திடம் 2 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத்  தழுவிக்கொண்ட  தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 37வதுஆண்டு நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்தில் பின்புலமாக உழைத்து சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூருகின்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குடும்பவாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.

ஒஸ்ரேலியாவில் தமிழ்த் தேசிய விடுதலைப்பயணத்தில் முன்னோடிகளாகத் திகழ்ந்து உயிர்நீத்து தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் அதிஉயர்விருதான மாமனிதர் விருது வழங்கிக்கெளரவிக்கப்பட்ட மாமனிதர்களான தில்லை ஜெயக்குமார் பேராசிரியர் எலியேசர், நாட்டுப்பற்றாளர் மகேஸ்வரன் மற்றும் மாமனிதர் மருத்துவக் கலாநிதி பொன் சத்தியநாதன், சக தமிழ்த் தேசிய பற்றாளர்களையும் இந்நாளில் நினைவுகூருவது இந்நினைவுநாளின் சிறப்பம்சமாகும்.

எமது சுதந்திரமான வாழ்வுக்காக முப்பதுநாட்கள் தியாகவேள்வியில் தன்னை உருக்கி தன்னுயிர் ஈந்த தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும், மாமனிதர்களையும், தமிழ்த் தேசிய பற்றாளர்களையும் நினைவுகூருகின்ற இப்புனிதமான நிகழ்வில் தமிழ்த்தேசியச் செயற்-பாட்டாளர்கள்,  பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்-கின்றோம்.

மேலும்...

அன்மைய பதிவேற்றல்...