மே 2009 சமர்க்களத்திலிருந்து வெளிவந்த திரு .யோ .செ .யோகி அவர்களின் உறுதித் தளராத உறுமல்
திரு .யோ .செ .யோகி அவர்களின் உறுதித் தளராத உறுமல்





மே 2009 சமர்க்களத்திலிருந்து வெளிவந்த திரு .யோ .செ .யோகி அவர்களின் உறுதித் தளராத உறுமல்
தமிழர்களுக்கு ஒரு நாடு இருந்திருக்குமாக இருந்திருந்தால் தமிழினத்தை காப்பாற்றி இருக்க முடியும்.
எங்களைப் பொறுத்தவரை ஒன்று தெரியும் எங்களோடு உண்டு உறவாடி சொந்தம் கொண்டாடிய எரிக் சொல்கெம் யசுசி அக்காசி இன்று கொலைஞர்கள் பக்கத்திலே நின்று தமிழர்கள் கொன்று குவிக்கபடுவதை நியாயப்படுத்துகிறார்கள். என்று இந்த புலிகள் அழிவார்கள் என்று தங்கள் நலன்பேணலாம் என்று பார்த்து கொண்டு நின்றவர்கள்
நன்று நன்று என்று சிங்கள தேசத்த பாராட்டவும் செய்கிறார்கள்.அவர்கள் நினைப்பது போல தமிழினத்தை வென்று சிங்களம் வாகை சூடாது. நாங்கள் ஏதோ ஒரு காலத்திலே எப்போதும் செய்தது போல இந்த போராட்டத்தின் செல்வழியை மாற்றுவோம்.
எங்கள் மக்களின் சுதந்திரத்திற்கான விடுதலைக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.நிச்சயமாக நாங்கள் இந்த இலக்கை அடைவோம்.அந்த வேளையிலே ஒன்றை நாங்கள் புரிந்து கொள்வோம் மீண்டும் மீண்டும் சொல்வோம். இன்று எட்டுக்கோடி தமிழ்மக்கள் பேசுகின்ற போதும் அந்த குரல் எடுப்படாமைக்கு காரணம்,எமக்கு என்று ஒரு நாடு இல்லாமைதான், எங்களுக்கு ஒரு நாடு இருந்திருக்குமாக இருந்திருந்தால் நாங்கள் உறுதியாக எங்கள் இனத்தை காப்பாற்றி இருக்க முடியும்.
தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.